உலக தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் உங்களை இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறது.

குறிக்கோள்

* உலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு நாட்டின் தலைநகரிலும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவது.
* உலகத் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து தகுதிவாய்ந்த, தமிழறிஞர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை வெளியிடுவது.
* தமிழ் நூலகத்துடன் வாசக சாலை ஒன்றும் இலண்டனில் நிறுவுவது.
* ஆண்டுக்கு இருமுறை தமிழகத்திலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்களை அழைத்து தமிழ் விழா நடத்துவது.

இலக்கு

* இலண்டன் தலைமைச் சங்கத்தினை மையமாக வைத்து ஒவ்வொரு நாட்டிலும் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கிளைகள் நிறுவுவது.
* உலகத் தமிழ் எழுத்தாளர்களின் நிகழ்வுகளையும், படைப்புகள் பற்றியும் உலகத் தமிழர்கள் அறிந்து கொள்ள தனிச்சுற்றுக்கு சிற்றிதழ் ஒன்று துவங்குவது.
* இலண்டனுக்கு வருகை தரும் அயலகத் தமிழறிஞர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தும், எழுத்தாளர் சங்கத்தின் வழியாக பாராட்டுவிழாவும் நடத்துவது.

செயல்பாடு

* இலண்டனில் உள்ள தமிழறிஞர்களை வைத்து உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் மாதம் இருமுறை திருக்குறள், கம்ப இராமாயணம், சிலப்பதிகாரம் வகுப்புகள் நடத்துவது.
* இலண்டனில் மாதம் தோறும் தமிழ் அறிஞர்களை அழைத்து (இயல், இசை, நாடகம், திரைப்படம்) நிகழ்ச்சிகள் நடத்துவது.
* இலண்டனில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் குடும்பங்களில் உள்ள தமிழ் குழந்தைகளுக்கு தமிழில் எழுதவும், பேசவும், படிக்கவும் மாலை நேர வகுப்புகள் நடத்துவது.

பதிவு

* இச்சங்கத்திற்கு உலகலாவிய தமிழறிஞர்கள் ஆலோசகர்களாகவும், தமிழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்க வேண்டும் என்பது பேரவா. எனவே தாங்கள் அருள்கூர்ந்து இசைவு தர கடிதத்தின் வழியாக தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். * இசைவுக் கடிதத்தினை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தவுடன் முறையாக தீர்மானம் போட்டு சங்கத்தினை இலண்டனில் பதிவு செய்திட வசதியாக இருக்கும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களை பற்றி

உலக தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைப்பதே எங்கள் சங்கத்தின் முதன்மை கடமையாக ஏற்று பணியாற்றுகிறோம்.



   எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கங்கள

      • வெளிவராத அரியநூல்களை அச்சிட்டுப் பரப்புதல்.

      • வடமொழி ஆங்கில நூலைகளை தமிழில் மொழி பெயர்த்தல் தமிழ் அறிஞர்களைக் கொண்டு பேருரையாற்றச் செய்தல்.

      • தமிழில் திறமிக்க பெருமக்களை ஒன்று கூட்டி தமிழாராய்தல்.

      • வேண்டத்தக்க புது நூல்களும் புத்துரைகளும் படைத்து அவற்றை அரங்கேற்றுதல்

உலக தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.வசந்தகுமாரன் அவர்களது நூல் வெளியீட்டு படங்கள்.


கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் "இந்திய தொழிலாளர்களின் தந்தை மாமேதை ம.சிங்காரவேலர்" புத்தகத்தை வெளியிட்டு பின் பெற்றுக் கொள்கிறார்.



திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் "The World and Cyber Crime" புத்தகத்தை வெளியிட்டு பின் பெற்றுக் கொள்கிறார்.



திரு.அப்துல் கலாம் அவர்கள் "உலகமும் பயங்கரவாதமும்" புத்தகத்தை வெளியிட்டு பின் பெற்றுக் கொள்கிறார்.

குமரிக்கண்டம்

Image-1
குமரிக்கண்டம்

தமிழனின் பிறப்பிடம் குமரிக்கண்டம். நாம் சிலப்பதிகார உரைகள் மற்றும் சங்க வரலாற்றுக்கள் மூலமாகவும் அறியலாம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரியதாக பரவியிருந்த குமரிக்கண்டம் பின்னாளில் நீரில் மூழ்கிப் போனது.

குமரிக்கண்டம்

நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.
நான்கு பெருங் கடல் கோள்கள்
1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது.
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது.
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது.
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.


கபாடபுரம்

கபாடபுரம் என்பது பாண்டியர்களின் இடைச்சங்ககால தலைநகரம் என்று கருதப்படும் நகரமாகும். கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்.ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன! குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. அதிலே கபாடபுரம் என்பது பாண்டியர்களின்இடைச்சங்ககால தலைநகரம் என்று கருதப்படும் நகரமாகும். இறையனார் அகப்பொருளில் பின்வரும் குறிப்புகள் படி கபாடபுரத்தில் சங்கம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

சான்றோர்கள்

  • அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவர், சித்தர்களில் முதன்மையானவர்.அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார்.சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார்.

    அகத்தியர்
  • முந்தைய காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக் குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர். ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்த காப்பியருள் ஒருவர் எனவே, தொல்காப்பியன் எனப்பட்டார்.தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இதை எழுதியவர் பெயர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.

    தொல்காப்பியர்
  • பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர்.கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 200க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வாழ்ந்துள்ளார்.
    திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகருக்கருகில், மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. காவிரிப்பாக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது. ஆதி-பகவன் என்ற பெற்றோருக்கு பிறந்ததாகவும், மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

    திருவள்ளுவர்
  • சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர்,அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர்,கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை ,சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்ச்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும்,கபிலரும் ஆவர்.ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஒளவை என்பது மூதாட்டி அல்லது தவப்பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கி்ற்று.இவர் பாடிய 59 பாடல்கள் சங்கநூல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு.ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப்புலவர் பாடல்தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடம் பெற்றுள்ளார்.

    ஒளவையார்

தொடர்புக்கு